Sunday, December 7, 2014

மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலேதான் கல்வி வளர்ச்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது: வினாயகமூரத்தி முரளிதரன்!

Sunday, December 07, 2014      
இலங்கை::மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலேதான் கல்வி வளர்ச்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது” இவ்வாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த(சா/த),க.பொ.த(உ/த) மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களை வலய ரீதியாகப்பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை எந்த ஆட்சியாளரும் செய்திராத கல்வி அவிருத்தியினை எமது மகிந்த ராஜபக்ஷ ஐனாதிபதி அவர்கள் செய்துள்ளார்கள் பல்கலைக்கழக அபிவிருத்தி, 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம்,நன சல மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளார் அது மாத்திரமல்ல கல்லடிப்பாலம் மண்முனைப்பாலம் ஓட்டமாவடிப்பாலம் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தனக்கு வாக்கு போட்டவர்கள் தனக்கு வாக்கு போடாதவர்கள் என பாராது சேவை செய்து வரும் எமது தலைவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
 
மட்டக்களப்பு மக்கள் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்த்ர்கள் அதற்காக ஜனாதிபதி அவர்கள் அபிவிருத்தி செய்யாமல் விடவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் சரத் பொன்சேக்கா ஜனாதிபதியாக வந்திருந்தால் அவரிடம் போய் பாலம் கட்டித்தாருங்கள் ரோட்டு போட்டுத்தாருங்கள் என கேட்க முடியுமா ஏனெனில் அவர் இராணுவத்திலிருந்து வந்தவர் அவர் பாணியிலேயே பேசுவார்.
 
தற்போதும் ஜனாதிபதிக்கு எதிராக நிற்பதற்கு மைத்திரிபால சிரிசேன தலைமையில் கூட்டுச்சேர்ந்துள்ளனர் இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் அக்கூட்டமைப்பில் சேர்த்துள்ளனர்.எதிர்வரும் தேர்தலில் தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment