Monday, December 8, 2014

அரச திட்டமொன்றை குறை சொல்வதற்கு குற்றச்சாட்டை முன்வைப்பதே எதிர்கட்சியினருக்கு இலகுவான விடயம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Monday, December 08, 2014
இலங்கை::இலங்கையில் சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத் திட்டங்களை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவை இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தறை விமானநிலையம், நுரைச்சோலை மின்நிலையம் என அனைத்தும் இலங்கை மக்களுக்கு நன்மையை அளித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டங்கள் மூலம் இலங்கையின் நிதி வீணடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி சிலர் எமக்கு ஏன் பெருந்தெருக்கள் தேவை , நாங்கள் அதனை உண்ணப் போகின்றோமா என கேட்கின்றனர், எங்காவது செல்லும்போது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியதன் அவசியம் உங்களுக்கு தெரியும்,அதனை அறியாதவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்
அரச திட்டமொன்றை குறை சொல்வதற்கு ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதே எதிர்கட்சியினருக்கு இலகுவான விடயம், இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டன, எனினும் ஊடகங்கள் ஒருசில சம்பவங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக மக்கள் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாக கருதுகின்றனர், பொலிஸாரின் அறிக்கை குற்றச் செயல்கள் குறைவடைந்து விட்டன என தெரிவிக்கின்றது, ஊடகங்கள் சாதகமான விடயங்களையும் வெளியிடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

No comments:

Post a Comment