Sunday, December 7, 2014

கடற்படையினரின் 64வது ஆண்டை முன்னிட்டு துஆ பிராத்தனை: பொத்துவில்!

Sunday, December 07, 2014      
இலங்கை::1950.12.09ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கடற்படை தனது 64 வது ஆண்டில் கால் பதித்துள்ளதை தொடர்ந்து இன்று நாடாளாவிய ரீதியில் இலங்கை கடற்படையினருக்காக வேண்டி துஆ பிராத்தனைகள் நடாத்தப்படுகின்றது.
 
அந்த வகையில்  பொத்துவில் ஜும்மாப்பள்ளிவாயலிலூம் விஷேட துஆ பிராத்தனை ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு தென்கிழக்கு தலமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தென்கிழக்கு கடற்படைப் பிரிவின் உதவி கட்டளையிடும் தளபதி கொமண்டர் றீச்சன் குணவர்த்தன,
 
தென்கிழக்கு தலமைக் காரியாலய கடற்படை வீரர்கள், பொத்துவில் ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர், செயலாளர், பேஸ் இமாம் மற்றும் கிராம நிலதாரி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment