Tuesday, December 9, 2014

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் பிளவு: பெரும்பான்மையான ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு!


 Tuesday, December 09, 2014
இலங்கை::
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாளைக்கான நாடு என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஒரு தரப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

எல்லாவல மேதானந்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர், மேல் மகாணசபையின் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, மேல் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க உள்ளிட்ட தரப்பினர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

புலிகளுக்குச் சார்பாக இயங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு தரப்பினர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எல்லாவல மேதானந்த தேரர் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

சிங்கள பௌத்த அரசியல் கட்சியான தமது கட்சியின் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் தமக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment