Tuesday, December 9, 2014

பா.ஜனதா கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலக வேண்டும்: சுப்பிரமணியசாமி!

Tuesday, December 09, 2014
சென்னை::பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதும் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:–
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 
பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியுள்ள நிலையில், பா.ம.க.வும் விலக வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
சுப்பிரமணியசாமியின் இந்த கருத்துக்கு பா.ம.க. வில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment