Tuesday, December 09, 2014
சென்னை::இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே திருப்பதி வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் புலிகளின் ஆதரவாளர்களினால் இன்று போராட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுமதிப்பது புலிகளின் ஆதரவாளர்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனிடையே, ராஜபக்சே திருப்பதி வருகையையொட்டி, தமிழக – ஆந்திர எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தணி வழியாக ஆந்திராவிற்கு செல்லும் கார், வேன், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பொன்பாடி சோதனைச் சாவடியில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதி மலை அடிவாரம் வரை 200 போலீசாரும், மேல் திருப்பதில் 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி நகரில் ஐந்து ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
.


No comments:
Post a Comment