Friday, December 12, 2014
இலங்கை::புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவரே நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை::புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவரே நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
$எதிரணியின் பொது வேட்ப்பாளர் மைத்திரிபாலசிறிசேன ரணில் விக்ரமசிங்கவை ஐயா என அழைக்கிறார். இவ்வாறு ஐயா என அழைக்கும் சிறிசேனவால், எவ்வாறு நாட்டை கொண்டு செல்ல முடியுமென இதன் போது கேள்வி எழுப்பினார்.
சமஷ்ட்டி தீர்வை ஏற்படுத்த முயன்ற சந்திரிக்கா, நாட்டை பிரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ரணில் விக்ரமசிங்க, சுயநிர்ணய உரிமையை வலியுறத்தும் ராஜித்த ஆகியோருடன் இணைந்து சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதற்காகவே சிறிசேன களத்தில் இறங்கி இருப்பதாகவும் அவர் இதன் போது குற்றம் சுமத்தினார்.

No comments:
Post a Comment