Friday, December 12, 2014
முன்னாள் புலி எதிர்பாளர் பின் நாள் புலி ஆதரவாளர் ஈ.என்.டி.எல்.எவ் குழுவின் ஐரோப்பிய தலைவருக்கு பிரித்தானியாவில் மூன்றாண்டு சிறைத்தண்டனை!
ஈ.என்.டி.எல்.எவ் குழுவின் ஐரோப்பிய தலைவரான குடு முஸ்தாபா என்றழைக்கப்படும் வீரையா ராம்ராஜிற்கு பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலண்டனில் இயங்கி வரும் கம்பியன் தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து 4.8 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சுருட்டு இறக்குமதி வரிமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ராம்ராஜ் செவ்வாய்க்கிழமை இலண்டன் சதக் பகுதியில் இயங்கி வரும் குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
புலிகளின் நிறுவனங்களின் நிதியுதவியுடன் இலண்டனை தளமாகக் கொண்டு ரி.பி.சி என்ற வானொலியை நடத்திய இவர், அரசியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக சமூக விரோதிகளையும், தேச விரோதிகளையும் ஒன்றிணைத்து புலிகளின் தமிழ்த் தேசிய கருத்துக்களையும், புலிகளுக்கு ஆதரவாக சார்பான பரப்புரைகளையும் முன்னெடுத்து வந்தவர்.
ஊடகவியலாளர் என்ற முத்திரையைக் குத்தியவாறு புலிகளுக்கு ஆதரவாக
இந்நிலையில் கம்பிய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர் புரிந்த 4.8 மில்லியன் பவுண்கள் சுருட்டு வரிமோசடிக்காக இவருக்கு பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் குடியுரிமையை இரத்துச் செய்யும் புதிய சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய அரசு தயாராகி வரும் நிலையில், ஈ.என்.டி.எல்.எவ் குழுவின் ஐரோப்பிய தலைவரான ராம்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....
சட்ட விரோத கடத்தல் கோஷ்டியுடன் கடந்த ஆண்டு காம்பியா தூதுவராலயத்தில் அங்கு சாரதியாக பணியில் இணைந்த வி ராம்ராஜ் உம் இணைந்த கொண்டுள்ளார்.
5மில்லியன் பவுண்கள் பெறுமதியான வரி செலுத்தப்படாத சுருட்டிப் புகைப்பத்தற்கான புகையிலையை வீட்டில் வைத்திருந்தமை மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக வி ராம்ராஜ் உட்பட 7 பேருக்கு சிறைத்தண்டனை இலண்டனில் உள்ள சௌதெர்ன் கிரௌன் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இக்காம்பிய குற்றவாளிகளுடன் டி பீ சி (தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ) எனப்படும் தமிழ் வானொலியின் பணியாளர், ஈஎன்டிஎல்எப் அமைப்பின் லண்டன் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இயங்கும் கம்பியா நாட்டு தூதரகத்தின் முக்கியஸ்தர்களால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத நடவடிக்கையில் கடந்த ஆண்டு அங்கு சாரதியாக பணியில் இணைந்த வி ராம்ராஜ் உம் இணைந்த கொண்டுள்ளார். வீ. ராமராஜ் இக்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்றும். குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்தது, வரி செலுத்தவேண்டி பொருட்களுக்கு வரி செலுத்தாது கையாண்டது , ஒழித்து வைத்திருந்தது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இவருக்கு மூன்று வருடம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தண்டனையில் பாதித் தண்டனையின் பின்னர் இவர் ஜூன் மாதம் 10ம் திகதி 2015ம் ஆண்டு வெளிவருவார்.
வீ. ராமராஜ் என்பவர் இலங்கையிலிருந்து இலண்டனுக்கு புலம் பெயர்ந்தவர்,
இவர் போதைவஸ்து கடத்தலில் சம்பந்தப்பட்டதால் குடு முஸ்தபா என்று பரவாக உலகெங்கும்நன்கு அறியப்பட்டவர்
செய்தியின் பின்னணியில்
இவர் சில வருடங்களுக்கு முன்னரும் சுவிஸ் நாட்டில் வைத்து வங்கி அட்டை மோசடிக்காக கைது செய்யப்பட்டு அங்கு சிறையிலே அடைச்சிட்டாங்க. எதோ புலி காட்டிக் கொடுத்திட்டான் என்று வானொலியில பயாஸ்கோப்பு படம் காட்டி உண்மைய மறைச்சுப் போட்டாங்க நம்ம சிவலிங்கம் ஆழ்வார். அவரை காப்பாற்றிரதில சிவலிங்கம் பெரிய சத்தியவான். ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்பதாகவும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்து வானொலி நடத்துவதாகம் பீற்றிக் கொள்ளும் ராமராஜனினதும் அவரின் அரசியல் ஆய்வுக்காரர்களினதும் வண்டவாளங்கள் வெளிவந்தால் போதும் மக்கள் இதுவரை காலமும் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறாங்க என்பது தெரிந்து போகும் ஆனால் தாமதித்தேனும் உண்மைகள் நிச்சயம் வெளி வருந்தானே.
ராமராஜனின் டி பீ சீ கம்பெனியில் உள்ள இயக்குனர்கள் , அதில அரசியல் ஆய்வு செய்ற ஆட்கள் என்று எல்லாருமே ராமராஜனுக்கு ஜால்ரா வீசுரவங்கதான், தேவைப்பட்டால் ஆளுக்கு ஆள் முதுகு சொரிவதிலே பலே கில்லாடிங்க. சொரிந்துதானே ஆக வேண்டும். அப்பத்தானே காசு வரும் . ஆட்சி மாற்றம் வேணும் எண்டு இலங்கை பிரஜாவுரிமையை தூக்கி எரிஞ்சு போட்டு இங்கிலாந்துக் காரனான தீ பீ சீக் கோஷ்டி ராமராஜன் அவ்வப்பொழுது சிறை செல்ல. சிவலிங்கம் என்ற ஆய்வாளர் வானொலி நடத்த காசு கேட்டு ஒப்பாரி வைக்க இவர்களின் கதை ஒரு தொடர் கதைதான் போங்க.
புலி அடிக்க வேணும் எண்டு அரசிடம் காசு தெண்டி வானொலி நடத்தி போட்டு , புலி மண்டையப் போட்டதும் மஹிந்த தங்களைக் கவனிக்கல்ல எண்டு, பொன்சேக்கா அணிக்கிட்ட காசு வாங்கி அவருக்கு ஆதரவாக ஜனநாயகம் பேசி(வேசி)ப் போட்டு , இப்ப மைத்திரி மாத்தையா அணிகிட்ட கிடச்ச கூலிக்கு கும்மாளம் அடிக்கக்குல, ராமராஜன் மாமியார் வீட்டுக்கு போயிட்டாரு. நாட்டிலே இரண்டு தடவை போனாராம். இங்க வந்து ஐரோப்பாவிலே இரண்டு தடவை உள்ள போயிருக்காரு. மகிந்தவோட நாலு மணி நேரம் கதைச்ச மனிசன் அல்லவா, சும்மாவா, ஐரோப்பாவிலே சாதனைத் தமிழன் இவரை விட்டால் வேறே யாரு இருக்கா ?, இவருக்கு ஒத்து ஒதிரதில சிவலிங்கம் ஐயாவுக்கு நிகர் அவரேதான். சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன ?
அவரோட கூடமாட இருக்கிற எல்லாருக்குமே ஒரு கதை இருக்குங்க, இப்ப புதுசா புலம் பெயர்ந்த சோனகர்களும், இலங்கை சோனக வலையர்களும் சேர்ந்து மஹிந்த மாமாவை வீட்டுக்கு அனுப்பனும் என்று ஆசாத் சாலி என்ற ஆசாமியோடு சேர்ந்து வேலை செய்ராங்கலாம். இப்படித்தான் போன்செக்காவுக்கும் இவங்க வேலை செஞ்சாங்கலாம், பாவம் சோனகர்களும் எப்படியாவது மஹிந்த மாமாவை வீட்டுக் கனுப்பிட்டு மைத்திரி காக்காவோட சிகல உருமை உறுமி மோளம் அடிக்க ஆட்சியப் பிடிக்க அள்ளி அள்ளி கொடுக்கிறாங்களாம். எப்படியோ தீ பீ சி காட்டிலே மழைதான் போங்க.

No comments:
Post a Comment