Saturday, December 13, 2014
இலங்கை::நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டும் வகையில்
நாட்டுக்காக போராடி ஊனமுற்ற விசேட அதிரடிப் படையணியைச் சேர்ந்த கான்ஸ்டபல்
டீ.எச் சுரங்க தர்மரத்னவுக்கு அவரது இடத்தில் பகுதியலவு நிர்மாணிக்கப்பட்ட
வீட்டை பூரனமாக அமைத்துக் கொடுக்குமுகமான கலந்துரையாடல், பாதுகாப்பு
அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷவின் தலைமையில்
நேற்று அமைச்சில் இடம்பெற்றது.
கான்ஸ்டபல் டீ.எச் சுரங்க தர்மரத்ன என்பவர் நாட்டில்
யுத்தம் மும்முறமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற “ஜய நியதை”
நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி ஊனமடைந்தார்.
போர்வீரர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் வாழ்கை
தரத்தை உயர்தும் நோக்கில் பாதுகாப்சை செயலாளரின் வழிகாட்டலுக்கமைய அமைச்சின்
சேவா வனித பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்கள் பல நலன்புரித்
திட்டங்களை முன்னெடுத்து அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கைச் சூழலை
ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment