Tuesday, December 02, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து முஸ்லிம்களை தூரமாக்கி அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னாலிருந்து சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களது சதித்திட்டங்களுக்கு பலியாகாது முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு நூறு வீத பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பேருவளை சீனன்கோட்டையில் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுடனான விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அளுத்கமை சம்பவத்தில் சேதமுற்ற பள்ளிவாசல், வீடுகள், வர்த்தக நிலையங்கள் கூடிய விரைவில் மீள்புனரமைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பொய்ப் பிரசாரங்களைச் செய்து முஸ்லிம்களை திசைதிருப்ப முனைவது கவலைக்குரிய விடயமாகும்.
இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களின் காலத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். அக்காலத்தில் நாம் செய்ததைப்போன்று மீள்புனரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை. சிறு சிறு பிணக்குகள் ஏற்படும் போது சிவில் சமூகம், மத தலைவர்கள் சேர்ந்து கலந்துரையாடி நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். பிரச்சினைகள் பூதாகரமாவதற்கு இடமளிக்கக் கூடாது.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவந்த போது அரபு நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருந்ததை எம்மால் மறுக்க முடியாது. ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர்தான் ஜனாதிபதிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை தூரமாக்குவதற்கு சில தீய சக்திகள் கங்கணங்கட்டி செயல்படத் தொடங்கின. பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டனர். இவ்வாறான போலியான பிரசாரங்களின் மூலம் முஸ்லிம் மக்களின் ஆதரவை தம் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கு சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
கொழும்பிலுள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதாக பொய்யான பிரசாரங்களையும் மேற்கொள்கின்றனர். கொழும்பிலுள்ள சேரி வாழ் குடிசைகளை அகற்றி மாடி வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி தலைநகரை அழகுபடுத்தி வருகின்றோம். ஓலைக் குடிசைகளை அகற்றி இதுவரை 5000க்கும் அதிகமான வீடுகளை அமைத்துள்ளோம். அமைக்கப்பட்ட 5000 வீடுகளில் கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முஸ்லிம்கள் என்றும் இந்நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகின்றனர். ஒருவரையொருவர் சந்தேகம் கொண்டு பார்க்கக் கூடாது. அதன் மூலம் தப்பான அபிப்பிராயமே ஏற்படுகிறது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, ரோஹித அபேகுணவர்தன, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மேல் மாகாண சபை உறுப்பினர்களான பியல் நிசாந்த. பிரசன்ன சஞ்ஜீவ, பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகரபிதா மர்ஜான் பளீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் எழும்போது உலமா சபையுடன் அடிக்கடி கலந்துரையாடியுள்ளேன். உலமா சபையும் அடிக்கடி இந்நாட்டு முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக என்னுடன் கலந்துரையாடியுள்ளது.

No comments:
Post a Comment