Tuesday, December 2, 2014

கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

Tuesday, December 02, 2014
இலங்கை::
கிழக்கு மாகாண சபையின் பட்ஜெட் அமர்வு ஜனவரி 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையை பகிஷ்கரிப்பு செய்ததன் எதிரொலியாகவே தவிசாளர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் பட்ஜெட் அமர்வின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானது.
 
இதன்போது ஆளும் கட்சியினை சேர்ந்த 10 உறுப்பினர்களும் எதிர்க் கட்சியினைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் சபை அமர்வில் கலந்து கொண்டனர். ஆளும் தரப்பை சேர்ந்த மு.கா. உறுப்பினர்கள் ஏழு பேரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
 
இதனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் வீமலவிர திசாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, சபையில் கோரமில்லை எனத் தெரிவித்து சபை அமர்வை ஜனவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக தவிசாளர் ஆரியபதி கலப்பதி அறிவித்தார்.
இதனால் சபை கூடி சில நிமிடங்களில் காலை 9.40 மணியளவில் சபை அமர்வு முடிவுக்கு வந்தது.
 
கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு கூச்சலிட்டனர்.
நேற்று திங்கட்கிழமை முதல் நாள் அமர்வின்போது காலையிலும் மாலையிலும் கோரமில்லை எனத் தெரிவித்து சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டமையும் பெரும் அமளி துமளி ஏற்பட்டமையும் செங்கோலை கைப்பற்றுவதற்காக உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டமையும் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இன்று திங்கட்கிழமைக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment