Tuesday, December 2, 2014

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை!

Tuesday, December 02, 2014
இலங்கைஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி இல்லத்தில் இன்று  காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம்
  
செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல் டயலொக் -2014’ உயர் மட்ட பாதுகாப்பு  மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டெவோல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துரையாடினார்
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment