Saturday, December 20, 2014

மட்டக்களப்பு மாவட்ட ரட்டவிருவோ அமைப்பு அங்கத்தவர்களுக்கு நிதி உதவி!

Saturday, December 20, 2014
இலங்கை::இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் தொழிலுக்கு சென்றுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ விஷேட திட்டங்களை தற்போது அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றன.
 
இதற்கென வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பிலுள்ள குடும்பங்களின் நலன்களுக்கென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் உருவாக்கப்பட்ட ரட்டவிருவோ அமைப்பின் சங்கங்களுடாக இந்த உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் ரட்டவிருவோ அமைப்புக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் விஷேட நிகழ்வு       வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எம்.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
 
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தற்போது அறிமுகம் செய்துள்ள விஷேட திட்டங்கள் பற்றிய அறிவூட்டல் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.
 
இத்திட்டத்தில் வீடமைப்பு கடனுதவிகள், தொழில் பயிற்சி கல்லூரிகளில் தொழில் கற்றல்களை மேற்கொள்ள இந்ந பணியகம் புலமைப்பரிசில் வழங்கும் திட்டங்களையும் அமுல்படுத்தி வருவதாக மாவட்ட பொறுப்பதிகாரி முஹம்மட் சத்தார் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலி சாஹிர் மௌலானா, உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.முஸ்தபா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான எம்.ரவுபாசம்,கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் எம்.ரபீல் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர். 

No comments:

Post a Comment