Thursday, December 11, 2014

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி!

Thursday, December 11, 2014
இலங்கை::ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியதன்  காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து  (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற ரயிலில் அம்பன்பொல மற்றும் கல்கமுவ இடையே யானைகள் இரண்டு மோதியதில் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியது. அத்துடன் ரயிலில் மோதிய இரண்டு யானைகளும் உயிரிழந்தன. எனினும் ரயிலில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
 
ரயில் பாதையை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் சேவை வழமைக்குத் திரும்பும் என்றும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment