Thursday, December 11, 2014

மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையிலேயே இராணுவத்திற்கு தேவையான காணிகள் பெறப்படுகின்றன: பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Thursday, December 11, 2014
இலங்கை::நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கவனமாக ஆராய்ந்து மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையிலேயே இராணுவத்திற்கு தேவையான காணிகள் உரிய முறையில் பெறப்படுவதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இது தவிர இராணுவம் தமக்கு தேவையான காணிகளை பலாத்காரமாக பெற்றுக் கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று தெரிவித்த அவர் அவ்வாரான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு படையினர் யாருடைய காணிகளையும் பலாத்காரமாக பெற்றுக் கொண்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் விளக்கமளிக்கையில் :-
 
வடக்கில் நிலைக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை தேவைக்கேற்ப படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வடக்கில் இருந்த வர்களில் தற்பொழுது சுமார் 40 வீதமான படைவீரர்கள் வடக்கிலிருந்து குறைக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குறைக்கப்படும் படைவீரர்களுக்கு முகாம் அவசியப்படுகிறது.
 
இந்நிலையிலேயே இவர்களில் ஒரு தொகையினருக்கு நிலைநிறுத்த இங்கிரிய பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த முகாமை அமைக்கும் நோக்குடனே கொடகல தோட்டத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் தனியார் காணியை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இத இவ்வாறு இருக்க இவற்றை மாறாக புறிந்துகொண்ட பிரதேச மக்கள் இராணுவம் பலாத்காரமாக காணிகளை சுவீகரிக்க முற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது அந்த மக்கள் உண்மை நிலைமை தெரியாமையினால் செய்தார்களா அல்லது யாருடையாவது தூண்டுதல் காரணமாக செய்தார்களா என்பது எமக்கு தெரியாது.
 
சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த காணிகள் பெற்ப்படுகின்றன. அதிலும் பணம் கொடுத்தே அந்த காரிகள் பெறப்படுகின்றன என்றார்.
 
இதேவேளைஇ வவூனியாஇ செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுலியங்குளம் பிரதேசத்திலுள்ள சுமார் 12 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிக்கவுள்ளதாக கூறி எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
 
மனிக்பாம் 3வது வலயம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்க வைக்க முகாமாக பயன்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு இந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் விவசாய தேவைகளைக் கருத்திற் கொண்டு இராணுவத்தினரால் பணம் கொடுக்கப்பட்டு குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது 2011ஆம் ஆண்டு முதல் குத்தகை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இது தமக்கு தேவையென்று சிலர் கோரி எதிர்பை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
சிலர் கூறுவது போன்று இராணுவம் முகாம் அமைப்பது என்பது காசை சுண்டிப் போட்டு முடிவெடுப்பது போன்ற தல்ல மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கவனமாக ஆராய்ந்து மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையிலேயே இராணுவத்திற்கு தேவையான காணிகள் உரிய முறையில் பெறப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment