Thursday, December 11, 2014
கனடா-பீல் பிராந்தியத்தில் நேற்று புதன்கிழமை காலை எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் நிரப்ப நின்று வாகனத்திற்குள் இருந்த குழந்தையுடன் திருடப்பட்டுள்ளது.
காணாமல் போன குழந்தை பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மால்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் வாகன சொந்தக்காரர் தனது குழந்தையை காருக்குள் விட்டு விட்டு பணம் செலுத்த சென்று சமயம் வாகனம் திருடப்பட்டுள்ளது.
திருட்டுப்போன 40-நிமிடங்களின் பின்னர் பொலிசார் சம்பவம் நடந்த எரிபொருள் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள ஒரு தொடர் மாடிக்கட்டிடத்தின் அருகில் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர்.



No comments:
Post a Comment