Saturday, December 20, 2014

பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்-மட்டக்களப்பில் ஜனாதிபதி!

Saturday, December 20, 2014
இலங்கை::பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் - குறுகிய அரசியல் நோக்கம் ஒரு நாளும் வேண்டாம்' நாம் எங்களுடைய காலத்தில் செய்த அபிவிருத்திகள் போன்று வேறு ஒரு காலத்திலும் யாரும் செய்ததில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி   மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இங்கு தொடர்ந்துஉரையாற்றிய அவர்,  கடந்த கால யுகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பல விதமான கஸ்டங்களுடன் இருந்தீர்கள். அது மாத்திரமல்ல  சுனாமியினால் கஸ்டப்பட்டீர்கள். அதே போன்று கடந்த இருள் சூழ்ந்த யுகத்தினால் கஸ்ரப்பட்டிர்கள். ஆனால் எமது அரசினுடைய அபிவிருத்திகள் ஊடாக பல  விதமான நன்மைகளைப் பெற்றுத்தர எம்மால் முடியும் என்று முதலில் கூறி வைக்கின்றேன். 
 
நாங்கள் எவ்வளவோ மணித்தியாலங்களை கடந்து வரவேண்டிய தூரங்களையெல்லாம் குறுகிய காலத்துக்குள் வந்து சேரக்  கூடிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறோம். அது மாத்திரமல் பாதைகள்,  பாலங்கள், குடிநீர் வசதிகள் என அத்தியாவசிய வசதிகளைப் பெற்றுத் தந்திருக்கிறோம். இனி வரும் காலத்தில் எல்லா வீட்டிற்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். 
 
இந்த மாகாணத்தில் பல விதமான அபிவிருத்திகளை செய்திருக்கிறோம் முக்கியமாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி, விமான நிலைய அபிவிருத்திகள் மூலம் பெருமளவான வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கிறோம். அது மாத்திரமல்ல விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பலவிதமான உதவிகளை வழங்கி அவர்களது வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம் அது மாத்திரமல்ல நெல் விளைச்சல் வந்தவுடன் அதனைச் சரியான விலைக்கு கொள்வனவு செய்யாது அவர்கள் விரும்பிய விலைகளுக்கு கொள்வனவு செய்தார்கள் அந்த நிலையை  மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபையை வலுப்படுத்தி மேலும் வளப்படுத்தவுள்ளோம். 
 
பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வசதிகளுக்காக மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஏற்படுத்தி கல்வியை  மேம்படுத்தி வளப்படுத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். நாங்கள் இந்த நாட்டில் அரச சேவைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். கடந்த காலத்தில் இருந்த அரசுகள் அரச சேவைகளில் இருந்த 6 தொடக்கம் 7 லட்சமானவர்களை 3 இலட்சமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயன்றனர். அதனை நாங்கள் 15 லட்சமாக அதிகரித்துள்ளோம். 
 
அது மாத்திரமல்ல கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மேலும் ஒன்றரை லட்சம் பேரை அரச வேவையில அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மீன்பாடும் தேநாட்டில் கடந்த 30 வருடகாலமாக இருந்த துன்பம் இப்போது இல்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகளைக் காண்பீர்கள். என்னைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெல்லச் செய்தீர்கள் இந்தத் தேர்தலிலும் வெல்லச் செய்வீர்கள். நாம் எப்போதும் சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். எமது தேசம் இன்னும் இன்னும் முன்னேறவேண்டும். நீங்களும் முன்னேறவேண்டும் குடும்பமும் முன்னேற வெண்டும். 
 
பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். குறுகிய அரசியல் நோக்கம் ஒரு நாளும் வேண்டாம். நாம் எங்களுடைய காலத்தில் செய்த அபிவிருத்திகள் போன்று வேறு ஒரு காலத்திலும் யாரும் செய்ததில்லை. பெருந்தொகையினருக்கு அரச நியமனம் வழங்கியுள்ளோம். விவசாயம், மீன்பிடி, சுயதொழில் சுற்றுலா, சுகாதாரம் என பல துறைகளிலும் அபிவிருத்திக்காக செயற்பட்டுள்ளோம். நாட்டில் சமாதானம் தான் தேவை நாட்டின் அபிவிருத்திதான் தேவை.  உங்களது பிள்ளைகள் நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னேறவேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment