Saturday, December 20, 2014

சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் எட்டாவது கற்கை நெறியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட முப்படை வீரர்களின் பட்டமளிப்பு விழா!

 Saturday, December 20, 2014
இலங்கை::சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் எட்டாவது கற்கை நெறியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட முப்படை வீரர்களின் பட்டமளிப்பு விழா மேற்படி கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைத்தார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 118 அதிகாரிகள் இதன் போது பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இவர்களில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 60 அதிகாரிகளும்இ இலங்கை கடற்படையைச் சேர்ந்த 21 அதிகாரிகளும்இ இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 20 அதிகாரிகளும்இ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரும் அடங்குவர். அத்துடன் பங்களாதேஷ்இ சீனாஇ இந்தோனேஷியாஇ மாலைத்தீவூஇ மலேசியாஇ நேபாளம்இ ஓமான்இ பாகிஸ்தான்இ ருவாண்டாஇ செனகல்இ சூடான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 வெளிநாட்டு முப்படை அதிகாரிகளும் தமக்கான பட்டங்களை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மஜனாதிபதி செயலாளரின் வருகையைத் தொடர்ந்து தாய் நாட்டிற்காக உயிர் நீத்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை நினைவூ கூறும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாண்ட் வாத்தியக் குழுவின் சாகசங்களைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெற்றதுடன் “த அவ்லெட்” ஆந்தை குஞ்சு என்ற வருடாந்த சஞ்சிகையூம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சகல துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காண்பித்த இராணுவ அதிகாரிக்கான “கோல்டன் அவ்ல்” விருதை மேஜர் கேடிஎஸ் லங்காதிலக்கவூம்இ கடற்படை அதிகாரிக்கான “கோல்டன் அவ்ல்” விருதை லெப்டினன்ட் கொமாண்டர் இஆர்பிகே உடகும்புரவூம்இ விமானப் படை அதிகாரிக்கான “கோல்டன் அவ்ல்” விருதை ஸ்கொட்ரன் லீடர் பிஎம்டிஏ பெத்தேவெலவூம்இ “கோல்டன் பென்” விருதை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை சேர்ந்த டபிள்யூபிஜிடிஜே சேனநாயக்கவூம் பெற்றுக் கொண்டனர்.

அதேபோன்று வெளிநாட்டு அதிகாரிகளில் சகல துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காண்பித்த இராணுவ அதிகாரிக்கான “கோல்டன் அவ்ல்” விருதை பங்களாதேஷை சேர்ந்த மேஜர் ஷேக் ரமிஸ் மொஹமட் வஸீமும்இ கடற்படை அதிகாரிக்கான “கோல்டன் அவ்ல்” விருதை பங்களாதேஷை சேர்ந்த கொமாண்டர் அபூ மொஹம்மட் சஸாட் ஹொஸைனும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரியஇ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கஇ விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்கஇ பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ரத்நாயக்கஇ பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கொமடாண்ட் மேஜர் ஜெனரல் ஜனக வல்கமஇ ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் உட்பட முன்னாள் முப்படைத் தளபதிகள்இ முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment