Saturday, December 20, 2014

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய புலிகூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Saturday, December 20, 2014
இலங்கை::யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய புலிகூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பொதுமக்கள்  ஆர்ப்பாட்டம்!
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய புலிகூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி   வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர்.
 
மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மீது தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினர் தாக்குதல் நடாத்தியதை கண்டித்து பேரணியொன்று இடம் பெற்றுள்ளது. 

மேற்படி கண்டனம் பேரணி நேற்றைய தினம் (19) யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்றது.
 
இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூட்டமைப்பின் காட்டுமிராண்டித்தனம் முடிவுக்கு வரவேண்டும். கூட்டமைப்பினர் அராஜகம் ஒழிக உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை தாங்கியதுடன் கூட்டமைப்புக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
 
இம்மாதம் 16 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது அநாகரிகமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததை கண்டித்தே நேற்றைய தினம் இக்கண்டனப் பேரணி இடம்பெற்றிருந்தது.
 
தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட புலிகூட்டமைப்பினரை பொலிசார் கைது செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து பொலிசாரிடம் பேரணியில் கலந்து கொண்டோர் மகஜரையும் கையளித்திருந்தனர். 
 
அத்துடன் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவி இதன்போது எரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment