Saturday, December 20, 2014

சாந்தினி சந்திரசேகரன் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!



Saturday, December 20, 2014
இலங்கை::
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி பொது எதிரணிக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு,
கேள்வி:
மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு என ஏற்கனவே உங்களுடைய கட்சியின் சார்பில் அறிவித்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கின்றீர்கள் இதற்கான காரணம் என்ன?
பதில்:
 எங்களது கட்சி ஆரம்பித்திலேயே எடுத்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தான் இதற்காக நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து எங்களுடைய கட்சியினூடான சில கோரிக்கைகளையும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அவருக்கு விளக்கமாக எடுத்து சொன்னோம். ஜனாதிபதியும் நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கும், மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார். அந்தவகையிலேயே என்னுடைய நிலைப்பாடு இறுதி வரைக்கும் அவருக்கு ஆதரவளிப்பது.
கேள்வி:
 கட்சியின் பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எடுத்த தீர்மானம் தவறானதா? அவர்கள் உங்களிடம் அனுமதி பெறாமல் எடுத்த தீர்மானமா?
பதில்:
சில காரணங்களுக்காக எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு கொள்கையாக கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.காரணம் இவ்வாறான கட்சி தாவல்கள் தேர்தல் காலத்தில் இடம்பெறுகின்றமை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் கட்சியினுடைய உயர் மட்ட குழு ஒன்றிணைந்து ஒரு முடிவு எடுத்தார்கள். ஆனாலும் அவ்வப்போது என்னுடைய கருத்துக்களையும் அவர்களிடம் தெரிவித்தேன். கூடுதலானர்கள் அதில் ஆர்வமுடையதன் காரணமாக அவர்களின் எடுத்த அந்த முடிவுக்கு தடைப்போட முடியாமல் இருந்தது. இருந்தாலும் என்னுடைய முடிவில் நான் உறுதியாகயிருக்கின்றேன்.
கேள்வி:
மலையக மக்கள் முன்னணி கட்சியின் பலம் பொது செயலாளரிடம் இருக்கின்றதா ? அல்லது தலைவியாகிய உங்களிடம் இருக்கின்றதா?
பதில்:
நிச்சியமாக என்னிடம் தான் பலம் இருக்கின்றது. பொது செயலாளர் என்ற வகையில் அவர் அவருடைய கடமைகளை மேற்கொள்கின்றார். எங்களுடைய யாப்பின் படி சில அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் கூட கட்சியின் முழு அதிகாரமும் தலைவியாகிய என்னிடமே இருக்கின்றது.

No comments:

Post a Comment