Saturday, December 20, 2014

இராணுவத்தின் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது: இராணுவத் தளபதி லெப்டினன் தயா ரட்நாயக்க!

Saturday, December 20, 2014
இலங்கை::
இராணுவத்தின் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக இராணுவத்தின் பலம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே இராணுவத்தின் தலையாய பொறுப்பு எனவும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகள் தொடர்ந்தும் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் நடவடிக்கைகள் காரணமாக இந்த சகல முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எல்லா நேரங்களிலும் படையினர் தங்களது ஒழுக்கத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment