Tuesday, December 02, 2014
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைந்து கொண்ட முறை தவறானது என்று ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் நாள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராகவே, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவினால் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.
புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டமை குறித்த வழக்கு தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.இந்த தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணை செய்து, தடையை நீக்கியது.
புலிகளுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு
வழக்கில் சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பானது நிர்வாக செயன்முறை அடிப்படையிலானது எனவும், சொத்து
முடக்கம் தொடர்பிலானது அல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
விரைவில் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைக்க இந்த மேன்முறையீட்டு மனு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment