Saturday, December 20, 2014

100 மில்லியன் ரூபா செலவில் பூண்டுலோயா நகரில் பதிதாக வணிக கட்டம் நிர்மானம்!

Saturday, December 20, 2014
இலங்கை::பூண்டுலோயா நகரின் மத்தியில் தீக்கிரையாகி கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வனிக கட்டடத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கான பணிகள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவித்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களின் தலமையில்  (டிச.18) ஆரம்பிக்கப்பட்டது
 
100 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற் கொள்ளப்படவுள்ளது இதில் 24 கடைத்தொகுதிகள் நிர்மானிக்கப்படவுள்ளதுடன் ஆறு மாத காலத்தில் இதன் நிர்மானப்பணிகள் நிறைவு பெரும் என எதிர்பார்கப்படுகிறது.

அத்துடன் இந்நிர்மானப்பணிகளை ஆரம்பித்து வைத்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்; இக்கடைத்தொகுதி திக்கிரையானதைத் தொடர்ந்து கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தொண்டமான் இக்கட்டடத்தை மீள் நிரமானம் செய்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவை வேண்டியதாகவும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இதனை உடனடியாக செய்யது கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாவும் கூறினார்.
 
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இப்பிரதேசத்திற்கு சமூகளித்து இத்திட்டத்தை முன்னெடுக்கும் முகமான ஏற்பாடுகளை செய்ததுடன் அதனைத் தொடர்ந்து இன்று இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் பல நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் கொழும்பு நகரை உலகின் சிறந்த மற்றும் வனிக நகரமாக மாற்றுவதற்கான சகல திட்டங்களும் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன், பூண்டுலோயா நகரை அழகான நராக மாற்றியமைக்க கிடைத்தமைக்காக தனது மகிழ்ச்சியையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்
 
மேலும் இக்கடைத் தொகுதி மட்டுமல்லாமல் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் கண்கவர் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தமது கருத்துக்களை பிரதேச வாசிகள் முன் மொழியலாம் எனவும் இப்பிரதேசத்திற்க்கு அவசியமான அனைத்து வசதிகளும் அரசினால் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச வாசிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நகரமாக பூண்டுலோயா நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறினார்
 
இந்நிகழவில் பிரதேச மத தலைவர்கள், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தொண்டமான், பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பெருந் தொகையான மக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment