Saturday, December 20, 2014

நாளை நமதே.. ஆசியாவின் ஆச்சர்யம் மிக்க நாடாக நாம் அனைவரும் இணைந்து இலங்கையைக் கட்டியெழுப்பு வோம்: மட்டக்களப்பு பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, December 20, 2014
இலங்கை::நாளை நமதே.. ஆசியாவின் ஆச்சர்யம் மிக்க நாடாக நாம் அனைவரும் இணைந்து இலங்கையைக் கட்டியெழுப்பு வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
மீன்பாடும் தேன் நாட்டில் கடந்த 30 வருடங்களாக மீன்கள் பாடவில்லை. நாங்கள் அந்த இருளான நிலையை மாற்றி முழு நாட்டையும் அபிவிருத்தியிலும் சமாதானத்திலும் கட்டியெழுப்பியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசாரக் கூட் டம் நேற்று மட்டக்களப்பு மாநகரில் இடம்பெற்றது. பிரதியமைச்சர் விநாய கமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து இங்குள்ள மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த கால இருண்ட யுகம் இனி இந்த நாட்டில் இல்லை. யுத்தத்தில் முழுமை யாக சேதமடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக கடந்த தேர்தலில் நீங்கள் எனக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்தீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளும் எண்ணங்களும் வீண்போகவில்லை.
 
நாட்டின் எந்தப் பிரதேசத்துக்கும் நீங்கள் எப்போது சென்றாலும் அங்கு இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்தி களை உங்கள் கண்களால் கண்டுணர முடியும். உங்கள் மாவட்டத்திலும் உங் கள் பிரதேசங்களிலும் நாம் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண் டுள்ளோம். அதனை நான் உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டிய அவசியமில்லை. உங்களால் நேரில் கண்டுணர முடியும்.
 
உங்கள் பிரதேசமும் இந்த நாடும் எதிர்காலத்தில் மென்மேலும் முன்னே றும். அதற்கான திட்டங்களை வகுத்து நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். நாம் எப்போதும் சொல்வதையே செய்வோம். செய்வதையே சொல்வோம். குறுகிய காலத்தில் இந்த நாட்டில் நாம் பாரிய அபிவிருத்தி செய்திருப்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். எமது தேசம் இன்னுமின்னும் முன்னேற வேண்டும். அதற்காக நீங்கள் தீர்மானம் எடுக்கும் காலமிது. சிந்தித்துச் செயற்படுங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் முன்னேற வேண்டும். அதேபோன்று உங்கள் குடும்பங்களும் இந்த நாடும் முன்னேற வேண்டும். ஒருபோதும் பொய்ப்பிரசாரங்களை நீங்கள் நம்பக் கூடாது.
 
குறுகிய அரசியல் நோக்கம் உங்களுக்கு வேண்டாம். இந்தக் குறுகிய காலத்தில் நாம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி இலங்கையின் வரலாற்றில் வேறு எப்போதும் இடம்பெற்றிருக்கவில்லை. நீங்களே அதற்கு சாட்சி. எமது ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கா னோருக்கு நாம் அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். விவசாயத்துறையிலும் கைத்தொழில் துறையிலும் மீன்பிடித்துறையிலும் பல சலுகைகளையும் மானியங்களையும் நாம் வழங்கியுள்ளோம். கல்வி, உயர்கல்வி சுகாதாரம் வீதி என அபிவிருத்திகள் இந்தக் குறுகிய காலத்தில் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பில் விமான நிலைய மொன்றை நிர்மாணிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமாதானமும் அபிவிருத்தியுமே இந்த நாட்டின் முக்கிய தேவையாகும்.
 
சிறந்த எதிர்காலமொன்றை நாம் உருவாக்கவேண்டியுள்ளது. உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்துக் காக நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
 
உங்கள் பிள்ளைகள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் சாத னைகளைப் படைக்க வேண்டும். எமது நாடு இன்னும் இன்னும் முன்னேற வேண்டும். ஆசியாவின் அதிசயமாக நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் என்றார். 

No comments:

Post a Comment