Monday, November 17, 2014

Monday, November 17, 2014
ரொறொன்ரோ::கனடா- HMCS ரொறொன்ரோ குழு உறுப்பினர்கள் துருக்கி கரையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மக்களை காப்பாற்றி ஹீரொக்கள் என புகழப்பட்டனர்.
 
6-றோயல் கனடிய கடற்படை உறுப்பினர்கள் துருக்கி கரையில் உணவருந்தி கொண்டிருந்த சமயம் ஏற்பட்ட தீயை கண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி தீயை அணைத்து எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றியும் உள்ளனர் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
HMCS
HMCS  ரொறொன்ரோ குழு உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆன்தலிய துறைமுக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சமயத்தில்  உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது தீ விபத்தை கண்டுள்ளனர்.

உடனடி செயற்பாட்டில் இறங்கிய குழவினர் வீதியில் காணப்பட்ட எரிகுழாய் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைத்துள்ளனர். உள் ஊர் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக தாங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

HMCS ரொறொன்ரோ மத்தியதரைக்கடலின் கிழக்குப்பகுதியில் துருக்கி தலைமையிலான நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் அனதலிய துறைமுகத்திற்கு ஒரு குறுகிய விஜயத்தை மேற்கொண்ட சமயம் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த பயிற்சி உக்ரைனிற்கெதிரான ரஷ்யாவின் நடவடிக்கைளிற்கு பதிலிறுக்கும் சஅபஞ–ஆதரவு இராணுவ நடவடிக்ககைளின் பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment