Monday, November 17, 2014
லண்டன்: கின்னஸ் சாதனைகளின் 10-வது ஆண்டு விழா லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் 8 அடி உயரமுள்ள மனிதருடன் இரண்டரை அங்குல மனிதரை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13-ம் தேதி கின்னஸ் சாதனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கின்னஸ் உலக சாதனையின் 10-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், உலகிலேயே மிக உயரமான துருக்கியை சேர்ந்த 8 அடி, 9 அங்குல உயரமுள்ள சுல்தான் கோசன் (31) என்ற விவசாயி கலந்து கொண்டார். அதேசமயம், மிகவும் குள்ளமான சுமார் இரண்டரை அங்குல உயரமுள்ள நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி (74) என்ற முதியவரும் கலந்து கொண்டார்.பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் கைகுலுக்கி கொண்ட நிகழ்ச்சியை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இவர்கள் இருவரும் கைகுலுக்கி கொண்ட நிகழ்ச்சியே, கின்னஸ் சாதனை உலகின் மிக சிறந்த சாதனையாக கருதப்படுகிறது என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.நான் 8 அடி உயரமாக இருப்பதால், எனது கால்முட்டிகளில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. என்னால் ரொம்ப நேரம் நிற்க முடியாமல் சோர்வடைகிறேன்.
அதேபோல், மிகவும் குள்ளமாக இருப்பதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குள்ள மனிதர் சந்திராவின் கண்களை குனிந்து பார்த்தபோது, அவர் மிக நல்லவராக தெரிந்தார் என்று 8 அடி உயர சுல்தான் கோசன் கூறினார்.என்னைவிட பலமடங்கு உயரமான சுல்தானை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன. அவர் குனிந்து என்னிடம் கைகொடுத்தபோது, என்னால் அவரது விரலை மட்டுமே பிடிக்க முடிந்தது. எனினும், கின்னஸ் சாதனையாளராக இருப்பதால், அனைத்து நாட்டு மக்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று இரண்டரை அங்குல குள்ள மனிதர் சந்திர பகதூர் டாங்கி தெரிவித்தார்.



No comments:
Post a Comment