Sunday, November 23, 2014

இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி புலிகளின் ஈழ நாட்டை உருவாக்க வேண்டும் என்ற யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி ஆகியோர் இணக்கம்!

Sunday, November 23, 2014
இலங்கை::இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி புலிகளின் ஈழ நாட்டை உருவாக்க வேண்டும் என்ற யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் இணக்கம் தெரிவித்த சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள வார பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
மலேசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், யோசனைக்கு இவர்கள் இணங்கியதாக அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
புலிகளின் ஈழ யோசனைக்கு இணங்குவது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் அரசாங்கத்தின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது.
 
புலிகளின் ஈழ நாட்டை உருவாக்க ஐக்கிய நாடுகளின் தலையீட்டில் கீழ் வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், வெளிநாடுகளில் வாழும் புலிகளின் புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்க இடமளிக்கப்பட வேணடும் என யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தவிர இலங்கையின் அரசின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் ஜெனிவாவில் தற்போது நடைபெறும் இலங்கைக்கு எதிரான விசாரணையில் தமிழர்களின் இனப்படுகொலை பற்றிய விசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் யோசனை நிறைவேற்றப்பட்டது.
 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் அனுமதியின்றியே அனந்தி சசிதரன் மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment