Sunday, November 23, 2014
இலங்கை::மஹிந்த ராஜபக்ஷவுடன் முதல்நாள் இரவு இருந்து உணவருந்திய மைத்திரிபால சிறிசேன அடுத்த நாள் அவருக்கு துரோகத்தனம் செய்தார்: காட்டிக்கொடித்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு வரும்: அஸ்வர் எம்.பி!
இலங்கை::மஹிந்த ராஜபக்ஷவுடன் முதல்நாள் இரவு இருந்து உணவருந்திய மைத்திரிபால சிறிசேன அடுத்த நாள் அவருக்கு துரோகத்தனம் செய்தார்: காட்டிக்கொடித்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு வரும்: அஸ்வர் எம்.பி!
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய தூரோகம் இழைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?
பாரிய கற்பாறையை அசைத்தாலும் மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது. அவருடன் முழு நாட்டு மக்களும் உள்ளனர் என அஸ்வர் தெரிவித் துள்ளார். சிறிமாவோ பண் டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது.
மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும். சர்வதேச சூழ்ச்சித் திட்ட மொன்று முன்னெடுக் கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார். கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாறிக்கொள்ளப்பட் டுள்ளன. இந்த விடயங்கள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.
இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இரவு வரை அவருடன் இருந்து சாப்பிட்டு விட்டு 30 வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தான். அதேபோன்று நபி பெருமானாரைக் காட்டிக்கொடுக்க முயற்சித்தான் அபு ஜஹ்ல். இவர்கள் எல்லாம் இந்த மதத் தலைவர்களைக் காட்டிக்கொடுத்த போதும் அவர்கள் சார்ந்த மார்க்கம் கோடான கோடி மக்களுடன் வளர்ந்தது.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் முதல்நாள் இரவு இருந்து உணவருந்திய மைத்திரிபால சிறிசேன அடுத்த நாள் அவருக்கு துரோகத்தனம் செய்தார். காட்டிக்கொடித்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு வரும் என அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

No comments:
Post a Comment