Sunday, November 23, 2014

அரசதரப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம்: பசில் ராஜபக்ச!

 

Sunday, November 23, 2014
இலங்கை::அரசதரப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பசில் ராஜபக்ச. கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று மாலை ஜனாதிபதியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பசில், நேற்றுவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பது சங்கீதக் கதிரை போன்று பலரைச் சுற்றிக் கொண்டிருந்தது. பலவந்தமாக உட்கார வைக்கப்பட முயன்ற போதிலும் பலர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டனர்.
 
ஏனெனில் அதனை ஏற்றுக் கொண்டால் பலியாடுகளாக நேரிடும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே தான் யாரும் இல்லாத நிலையில் ஆளுங்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துக் கொண்டு போய் அதில் உட்கார வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நாள் என்பன தெளிவாகத் தெரிந்த நிலையில் இந்த தேர்தல் அலுவலகம் திறக்கப்படுகின்றது. ஆளுங்கட்சியை விட்டு விலகிப் போனவர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் காத்திருக்கின்றது. அவர்கள் திரும்பி வந்தால் மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment