Sunday, November 23, 2014

இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சர்வதேச நாடுகள் முயற்சி: நிமல் சிறிபால டி சில்வா!

Minister Nimal Siripala
Sunday, November 23, 2014
இலங்கை::இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சர்வதேச நாடுகள் முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்களாக பதவி வகித்த பலர் கடந்த காலங்களிலும் கட்சியை விட்டுச் சென்றிருந்தனர்.மக்களின் செல்வாக்குமிக்க கட்சி என்ற வகையில் பொதுச் செயலாளரின் வெளியேற்றத்தால் மக்கள் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படாது.
 
கடந்த காலங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பலர் பிரிந்து சென்ற அனைவரும் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்தனர். ரணில் விக்ரமசிங்கவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக பதவியில் அமர்த்த வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இல்லை.
 
சவால்கள் நிறைந்த சூழலில் மேலும் மேலும் பலமடைந்த கட்சி என்ற வகையில் தற்போதைய நிலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் தான் போகப்போவதில்லை எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment