
Sunday, November 23, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நடுகள்அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ம் அமர்வுகளின் மூன்றாம் கமிட்டி கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கிரமமான முறையில் கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment