Sunday, November 23, 2014

புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Sunday, November 23, 2014
இலங்கை::புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புத் தரப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

 புலி போராளிகளை புகழ்ந்து பாராட்டும் வகையிலான நிகழ்வுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

 புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏதாவ ஓர் வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளை புகழ்ந்து பாராட்டுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், வடக்கில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விவகாரங்களில் படையினர் எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களை திறப்பதுவும் மூடுவதும் உயர்கல்வி அமைச்சின் தீர்மானமே தவிர பாதுகாப்பு தரப்பிற்கு தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment