Tuesday, November 11, 2014

புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும்: இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன்!

Tuesday, November 11, 2014
சென்னை::புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் கருணா இழைத்த குற்றச் செயல்களுக்காக அவர் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

1987 முதல் 1990ம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக ஹரிஹரன் கடமையாற்றியுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)  புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் சிறுவர்கள் பெண்கள் உளிட்ட பல்வேறு தரப்பினரை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 175 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கருணாவின் படையணியைச் சேர்ந்த புலி உறுப்பினர்கள் சிங்கள முஸ்லிம் படையதிகாரிகளை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா இந்த சம்பவங்களின் போது அந்த இடங்களில் பிரசன்னமாகியிருக்காத போதிலும், அவரது தலைமையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு கருணாவும் பொறுப்பேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இழைக்கப்பட்ட யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கருணா கோரியுள்ளதாகவும், யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட சம்பங்கள் முதல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதுவரையில் புலிகள் இயக்கத்தில் இருந்த காலத்தில் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்காகவேனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மன்னிப்பு கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன்
 

No comments:

Post a Comment