Tuesday, November 11, 2014

புலிகளை தடை செய்யுமாறு ரணில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை!

Tuesday, November 11, 2014
இலங்கை::
புலிகளை தடை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுத்து மூலம் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்க உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐக்கியநாடுகள் உயர் பிரதிநிதி பெட்ரிக்கா மொஹாரினிவிடம் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்hளர்.

எவ்வாறெனினும், புலிகளின் சொத்து முடக்கம் தற்காலிக அடிப்படையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கம் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment