Tuesday, November 11, 2014

இலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்: சங்ககராவுக்கு ஓய்வு!

Tuesday, November 11, 2014
இலங்கை::ஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அணி விளையாடி வருகிறது. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை வீரர் சங்ககராவுக்கு காயம் ஏற்பட்டதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்  வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத்துக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ், உபுல் தரங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா எரங்கா, லகிரு திரிமன்னே, தினேஷ் சண்டிமால், அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
உலகக்கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment