Wednesday, November 19, 2014

மாத்தறை - நாவிமன வீதியில் இராணுவ வீரர்கள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து : இருவர் பலி இருவர் காயம்!

Wednesday, November 19, 2014
இலங்கை::
மாத்தறை - நாவிமன வீதியில் இன்று காலை முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்து
 
விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
இராணுவத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவிமன இராணுவ முகாமில் சேவையாற்றிய இராணுவ வீரர்களே  இந்த விபத்தில் உயிரிழந்து மற்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
 
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment