Monday, November 24, 2014

மைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது: பஷீர், ஹரீஸ் சவால்!

Monday, November 24, 2014
இலங்கை::
வெள்ளிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட அரசியல் பூகம்பம் பாராளுமன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அன்றை தினம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி விசேட ஊடக மாநாட்டை நடாத்தினார். அது சிரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.
 
அதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரும் பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அலுவலக அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
பின்னர் அங்கிருந்து வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எம்.தௌபீக் ஆகியோர் அமைச்சர் பஷீர் சேகுதாவூதுடன் லிப்டில் சென்று கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஆர்.யோகராஜனும் அதி பயணித்துள்ளார்.
 
இதன்போது யோகராஜனிடம் பஷீர், ஹரீஸ் ஆகிய இருவரும் மிகவும் சூடாக பின்வருமாறு தெரிவித்துள்ளனர்;
 
மைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது; பொறுத்திருந்து பாருங்கள். மைத்திரி வென்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதென்பது பகர் கனவு.
அந்த சில நிமிடங்களுள் இவர்கள் இருவரும் இப்படி சவால் விட்டு கதைத்தமை பெரும் அதிர்ந்து போனாராம் யோகராஜன் எம்.பி.
 
இதனை தௌபீக் எம்.பி. அமைதியாக நின்றவாறு அவதானித்துள்ளார்.
லிப்ட் திறந்ததும் யோகராஜன் இவர்களிடம் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று விடை பெற்றுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment