Monday, November 24, 2014

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் சொல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கிய ஆதாரங்கள் உள்ளன: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Monday, November 24, 2014
இலங்கை::
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்  புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
மாத்தளை சந்தியில் நடைபெற்ற வீதி அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  புலிகளுக்கு பணம் வழங்கவில்லை என சொல்ஹெய்ம் மறுத்துள்ள போதிலும் பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
 
இது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களையும் தேவையென்றால் சமர்ப்பிக்க முடியும். விடுதலைப் புலிகளுக்கு சொல்ஹெய்ம் பணம் வழங்கியமை உண்மையானது. தேவை ஏற்பட்டால் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். எனினும், அந்த ஆதாரங்களை நான் சமர்ப்பிக்கப் போவதில்லை. போர் இடம்பெற்ற காலத்தில்
 
புலிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் வழங்கி நாட்டை பிளவடையச் செய்ய பலர் முயற்சித்தனர். அவ்வாறான முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment