Monday, November 24, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவது என்ற தீர்மானத்தில் டயஸ் போராவுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அவர்கள் அல்ஜஙிரா சர்வதேச தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேரடி நேர்காணலின் மூலம் அம்பலமாகியுள்ளதென விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிஸழத்தை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் மேற்குலக நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள் ளமையை உரிய நேரத்தில் சான்றுகளுடன் உறுதிப்படுத்துவோமெனவும் அமைச்சர் அளுத்கம சூளுரைத்தார்.
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவது என்ற தீர்மானத்தில் டயஸ் போராவுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அவர்கள் அல்ஜஙிரா சர்வதேச தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேரடி நேர்காணலின் மூலம் அம்பலமாகியுள்ளதென விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிஸழத்தை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் மேற்குலக நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள் ளமையை உரிய நேரத்தில் சான்றுகளுடன் உறுதிப்படுத்துவோமெனவும் அமைச்சர் அளுத்கம சூளுரைத்தார்.
ஆளும் தரப்பிலிருந்து அதிக எண்ணிக்கையான எம்.பிக்கள் எதிரணியை வந்தடைவரென ஆவலுடன் காத்திருந்த ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றமடைந்த கடுப்பில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேற்குலக நாடுகள் முன்னெடுத்த சதி முயற்சியானது தங்கையை காட்டி அக்காவை மணம் முடித்துக்கொடுப்பது போல் அமைந்தாலும் எதிரணியினருக்கு இப்போது கிடைத்திருப்பதோ வெறும் பிஆச்சிபீ மட்டும்தான் எனவும் அவர் கிண்டல் செய்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஆளும் தரப்பில் தனக்கென அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் இல்லையென எதிரணிக்குச் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன, அங்கு அகில இலங்கை சமாதான நீதவான் போன்று பெயரளவு ஜனாதிபதியாகவே இருக்கப்போகிறாரெனவும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மேற்குலக நாடுகளே எதிரணியின் பொது வேட்பாளரை தெரிவு செய்யுமென்பதனை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தோம். எதிரணி பொது வேட்பாளர் ஜனாதிபதியானதும் ரணிலை பிரதமராக்க வேண்டுமென்பதும் இந்நாடுகளுடனான ஒப்பந்தமாகும்.
கடந்த 21 ஆம் திகதி எதிரணியினால் பொது வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில் 20 ஆம் திகதி இரவு அல்ஜஙிரா தொலைக்காட்சியில் எதிர்க்கட்சி எம்.பிக்களான ரஜீவி விஜேசிங்ஹ, ஹர்ச டி சில்வா மற்றும் க்ளோபல் தமிழ் போரத்தின் செயலாளர் சுரேந்திரன் ஆகிய மூவரும் நேரடி நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தனார். அதில் டயஸ் போரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுரேந்திரன் என்பவர், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜனாதிபதியவர்கள் இராணுவ நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட விருப்பதனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென கூறுகின்றார்.
எதிரணியினர் டயஸ் போராவுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றமைக்கு இதுவே சிறந்த உதாரணமாகும். இலங்கையில் அமைதி தொடரக்கூடாது என்பதற்காக தமிஸழத்தை உருவாக்க மேற்குலக நாடுகள் சதித்திட்டம் திட்டியுள்ளன.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தை பெற்றுத்தருவதாக ரணிலும் சந்திரிக்காவும் இங்குள்ள தூதரகங்களில் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதைத் தவிர ரணிலுக்கு தெரியாமல் சந்திரிக்காவும் சந்திரிக்காவுக்கு தெரியாமல் ரணிலும் இவ்விருவருக்கும் தெரியாமல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இவர்களுக்கு தெரியாமல் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக்க ஹெல உருமய ஆகியனவும் ஒன்றுக்கு ஒன்று முரணான பல இரகசிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
இவை அனைத்தையும் உரிய சந்தர்ப்பத்தில் சாட்சிகளுடன் நாம் உறுதிப்படுத்துவோம். ரணில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழிப்பேன் என பெயரளவில் கூறிய போதும் அவரது உள்நோக்கம் தமிஸழத்தை வழங்குவதாகும்.
அதற்காகவே பதின் மூன்று பிளஸ்களை கொண்ட உறுப்பினர்களை சேர்த்து இந்த போலி கூட்டமைப்பிணை உருவாக்கியுள்ளார். இவ்வாறான ஒருவர் நாட்டின் பிரதமர் ஆவதனை மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்வதேச நாடுகளின் சதி வலையில் பொது கட்சியின் முன்னாள் செயலாளர் விழுந்துள்ளமை எமக்கு கவலையளிக்கிறது.
பராக்கிரம சமுத்திரத்தினை மூடி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தம்பி ஹோட்டல் கட்டியபோது ஐ.தே.க.வினர் பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக சேறு பூசிய வேளை நாம் அவருக்காக வாதாடினோம். பாராளுமன்றத்தில் வைத்து ரணிலை நயவஞ்சகன் என திட்டிய மைத்திரிபால இன்று அவருடன் கூட்டு சேர்ந்து அவரை பிரதமராக்க முயற்சிப்பது வேடிக்கையாகவுள்ளதெனவும் அவர் கூறினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் எந்தவொரு உறுப்பினரும் எமது கட்சியைக் காட்டிக்கொடுத்து, கட்சியிலிருந்து விலகி சர்வதேசம் விரித்துள்ள சதி வலைக்குள் சிக்க மாட்டார்களென்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நான் அத்தாட்சிப்படுத்துவேன்பீ எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.
ரணிலை பிரதமராக்கவே சர்வதேசம் இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றது. ஜனவரி 08 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஜனாதிபதியவர்கள் மேலதிக 25 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவது உறுதியெனவும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஒரு சிலர் பிரிந்து சென்றாலும் பிரபல்யமானவர்கள் திறமை படைத்தவர்கள் மற்றும் அடி மட்ட ஆதரவாளர்கள் தொடர்ந்தும் எம்முடனேயே இருக்கின்றனரென துறைமுக நெடுஞ்சாலைகள் கருத்திட்ட அமைச்சர் ரோஹித்த அபய குணவர்தன தெரிவித்தார்.
எமது மக்கள் முற்றிலும் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி சீர்குலைந்து மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ. தலைதூக்க அவர்கள் இடமளிக்க மாட்டார்களெனவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment