Monday, November 17, 2014

புலிகளை நினைவுபடுத்துவதற்காக புலிகளால் மாவீரா் தினம் கொண்டாடி ‘மாமா’வீரா்களாக முயல்பவா்களுக்கு?

Monday, November 17, 2014
இலங்கை::
போராட்டத்தில் உயிர்நீா்த்த புலிகளை  நினைவுபடுத்துவதற்காக   புலிகளால் கொண்டாடப்பட்டு வந்த நினைவு தினமே மாவீரா் நாளாகும்.
 
ஒவ்வொரு வருடமும் நவம்பா் மாதம் 27ம் திகதி இம் மாவீரா் தினத்தை  புலிகள் கொண்டாடி வந்தனா். மாவீரா் தினம்  புலிகளால் கொண்டாடப்பட்டு வந்த காலத்தில் அவா்கள்  அந்தத் தினங்களில் மேற்கொண்டு வந்த நடவடிக்கை...
 
மாவீரா்களை அடங்கம் செய்த இடத்திற்கு செல்பவா்கள் கூட மௌனமாகவே செல்வதற்கு மாவீரா் கல்லறைகள் காணப்பட்ட இடத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.  பண்டிகை போல் மாவீரா் தினத்தை புலிகள் கொண்டாடிக் கொண்டிருந்தனா்.
 
ஆனால் புலிகள் முற்றாக முடக்கப்பட்டு போர் முடிவடைந்த நிலையில்  தமிழா் பிரதேசங்களில் தற்போது கொண்டாடப்பட்டதாகவும், கொண்டாடப்படவுள்ளதாகவும்  ஊடகங்கள் தெரிவிக்கும் புலிகளின் மாவீரா் தினம் மிகவும் கேலிக்குரியது,
 
இவா்கள் எவ்வாறனவா்கள் என்பதும் இத்தகையவா்கள் தற்போது எவ்வாறான நிலையில் இருக்கின்றார்கள் என்பதையும்   அனைவரும் அறிந்து வைத்திருந்தல் அவசியம்.
 
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவா்களாக உள்ளவா்களில் சிலா், புலிகளுக்கு ஆதராவாக தமிழ்த் தேசியவாதிகள் என தங்களைக் காட்டிக் கொள்பவா்களினது துாண்டுதலாலும் புலம்பெயா்ந்த புலிகள் சிலரின் பணத்தாலும் மாவீரா் தினத்தைக் கொண்டாடுகின்றோம் என அத் தினத்தையே  கொண்டு இருக்கின்றார்கள்.
 
பல்கலைக்கழக வாழ்க்கையில் வரும் பகிடிவதை மற்றும் வரவேற்று நிகழ்வு, பிரிவுஉபசார நிகழ்வு, பட்டமளிப்பு நிகழ்வு என்ற கொண்டாட்டங்கள் போல் மாவீரா் தினக் கொண்டாட்டமும்  ஒன்றாகி விட்ட என்ற  கேவலமான நிலையில் உள்ளது.
 
மூக்கு முட்டக் குடித்து விட்டு மாணவிகளுடனும் ஏனைய பெண்களுடனும் லீலைகள் புரிந்து கொண்டு தங்களை பெரிய ஹீரோக்கள் எனக் காட்டுவதற்காகவே யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் தற்போது மாவீரா் தினம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்கள்.  தங்களது அம்மம்மா, அப்பப்பா மற்றும் தங்கள் நெருங்கிய உறவுகளுக்கு திவசம் கொண்டாடாத இந்த ஹீரோக்கள் மாவீரா் தினம் என்ற போர்வையில் தங்களை ஊடகங்களுக்கும், மற்றவா்களுக்கும் ஹீரோத்தனத்தைக் காட்ட முயல்கின்றார்கள்.
 
புலிகளின் தமிழ்த்தேசியத்தை  வைத்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்  குறித்த மாணவா்கள் செய்யும் குரங்குச் சேட்டைக்கு ஆதரவு வழங்குவது அதைவிட கேவலமாக இருக்கின்றது.
 
அல்லது போரினால் பாதிக்கப்பட்ட  அங்கவீனமான  உதவிகள் செய்யலாம். அதை விடுத்து பல்கலைக்கழகத்தில் வைத்து 5 ரூபா மெழுகுதிரியை ஏற்றுவதோ அல்லது வேறு இடங்களில் வைத்து மெழுகுதிரி ஏற்றுவதாலோ  விடிவு ஏற்படப்போவதில்லை.
 
போராட்டத்தில் இறந்தவா்களை நினைவு கூருவதற்கு இலங்கை அரசாங்கமோ அல்லது யாழ் மாவட்ட இராணுவத்தளபதியோ எந்தவித தடங்களும் ஏற்படுத்தபோவதில்லை.
 
ஆனால்  இவ்வாறு பொது இடங்களில் போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதவா்களும், போராட்த்தில் பங்கு பற்றாது சுகபோக வாழ்கை வாழ்ந்து வருபவா்களும் புலிகளின் மாவீரா் தினத்தை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கு படைத்தரப்போ இலங்கை அரசோ ஒருபோதும் அனுமதிக்காது என்பதே வெளிப்படை.
 
ஆனால் இறந்தவா்களை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கும் எவருக்கும் அனுமதி அளிக்ககூடாது. அவ்வாறு பிழைப்பு நடாத்துபவா்களை தடுத்து அவா்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்கக் கூடாது.

அவ்வாறு இல்லாது புலிகளின் மாவீரா் தினம் என்ற ஒன்றை வைத்து உங்களை நீங்கள்  ஹீரோவாகக்  காட்ட முயன்றால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை சீறோவாக முடியும் என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment