Thursday, November 6, 2014

தமிழ்த் தேசியக் (புலி பினாமி) கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Thursday, November 06, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி பினாமி) கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

முதலமைச்சராக பதவிப் பிரமாணம்செய்து கொண்டதன் பின்னர், விக்னேஸ்வரனின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான கண்ணபிரான் தொடர்பிலான நினைவுப் பேரூரையில் உரையாற்றும் நோக்கில் விக்னேஸ்வரன் சென்னை விஜயம் செய்கின்றார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் (புலி பினாமி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயமானது அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஏற்பாடு செய்யவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment