Thursday, November 06, 2014
இலங்கை::இரட்டைக் குடியுரிமை பெற எண்ணியுள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அதற்கான வசதிகளை பெற்றுக் கொடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமை பெறவிரும்பு வெளிநாடு வாழ் இலங்கையர்கள் இந்த குழுவிடம் விபரங்களை முன்வைக்க வேண்டும்.
இரட்டை குடியுரிமையை வழங்குவதா இல்லையா என்ற இறுதி முடிவை இந்த குழுவே எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் இரட்டை குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
இவர்களில் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு கோத்தபாய தலைமையிலான குழு நிபந்தனைகளின் அடிப்படையில் இரட்டை குடியுரிமையை வழங்க சிபாரிசு செய்யும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment