Friday, November 07, 2014
மொனாகோ::எந்த ஒரு நாடும் தீவிரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்கக் கூடாது என்றும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி பாகிஸ்தானை மறைமுகமாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
சர்வதேச காவல் படையின் (இன்டர்போல்) 83-வது பொது சபை கூட்டம் மொனாகோவில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தீவிரவாத செயல்களை ஒருங்கிணைப்பது, தூண்டுவது, தீவிரவாதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, நிதியுதவி அளிப்பது, தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பது அல்லது சகித்துக் கொள்வது ஆகிய செயல்களில் எந்த ஒரு நாடும் ஈடுபடக்கூடாது.
தீவிரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்பு வசதிகளோ பயிற்சி முகாம்களோ தங்கள் நாட்டு எல்லைக்குள் இல்லை என்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாத அமைப்புகளுக்கும் அவர்களின் சட்டவிரோத பணத் துக்கும் அடைக்கலம் கொடுப்பது, தீவிரவாதிகளின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசி யத்தை உலக நாடுகள் உணர வேண்டும்.
இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலை, அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக் குப்பிறகு, தீவிரவாதிகள் மீதான கண்ணோட்டத்தை வளர்ந்த நாடுகள் மாற்றிக் கொண்டன. ஆனால் இந்தியாவில் கடந்த 1980-களி லிருந்து தீவிரவாத சம்பவங்கள் தொடர்கின்றன. இதைக் கட்டுப் படுத்துவதற்கு கடலோரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
எந்த வகையிலும் ஊக்கமளிக் கக் கூடாது என தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு உலக நாடுகள் கூட்டாக இணைந்து அழுத்தம் தர வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியதை நினைவுகூர விரும்புகிறேன்.
மேலும் இணையதள வழி குற்றங்களைத் தடுப்பதற்கு தேவையான செயல் திட்டத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் இந்த நேரத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.




No comments:
Post a Comment