Friday, November 07, 2014
சென்னை::ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த எமர்சன்(வயது 35),
அகஸ்டஸ்(35), வில்சன்(40), பிரசாத்(30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடந்த
2011-ம்ஆண்டு நவம்பர் 28-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி அந்த 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களுடன் இலங்கையைச்சேர்ந்த 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதான தமிழக மீனவர்கள் 5 பேர்களுக்கும், இலங்கை மீனவர்கள் 3 பேர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து இலங்கை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 14-ந்தேதிக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்றும் ஐகோர்ட்டு கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து 14-ந்தேதிக்குள் இலங்கை சுப்ரீம்கோர்ட்டில் இந்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேல் முறையீட்டுச்செலவை இந்திய அரசே ஏற்க உள்ளது. இந்தவழக்கின் தீர்ப்பு சிங்களத்தில் உள்ளதால், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறது.
இந்த தகவலை தமிழக மீன்வளத்துறை செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை
எதிர்த்து 14-ந்தேதிக்குள் மேல் முறையீடு செய்ய இந்திய அரசு நடவடிக்கை
எடுத்து வருகிறது.

No comments:
Post a Comment