Friday, November 07, 2014
புதுடெல்லி::யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைத் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறி;த்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பாருடீன் தெரிவித்துள்ளார்.
யுத்தக் காலத்தில் தமிழ் பெண்களை இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் முறைப்பாடு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் கிழக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைத் தமிழ் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என அண்மையில் பாராளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.
அநாமேதய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அக்பாருடீன் தெரிவித்துள்ளார். அநாமேதய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போனால் முடிவின்றி பதிலளிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருந்திருந்தால் அது குறித்து அரசாங்கம் முறைப்பாடு செய்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக குற்றம் சுமத்தினால் மட்டும் பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment