
Saturday, November 08, 2014
மாஸ்கோ: பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போர் நினைவு நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு நடைபெற்ற உக்ரைன் பிரச்னையால், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் அடுத்த வாரம் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் கலந்து கொள்கின்றனர்.இம்மாநாட்டின்போது சர்வதேச பொருளாதாரம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சம்பிரதாய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இருவரும் கலந்து கொள்கின்றனர்.மியான்மரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் மாநாடு, இவ்விரு நாடுகளும் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இத்தகைய வாய்ப்பை ரஷ்ய அதிபர் புறக்கணிக்க மாட்டார் என்று ரஷ்ய வெளியுறவு துறை ஆலோசகர் யூரி உஸாகோவ் நேற்று மாஸ்கோவில் கூறினார்.
No comments:
Post a Comment