Saturday, November 08, 2014
இலங்கை::கண்டி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடாபில் தண்டனை விதிக்கப்பட்ட புலிகளின் நான்காம் சந்தேக நபர், தீர்ப்பிற்கு எதிராக செய்த மேன்முறையீட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக மரண தண்டனையும், 667 ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகளுக்கு எதிராக குறித்த சந்தேக நபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
புலிகளின் தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பத்து பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
புலிகளின் முத்துசாமி தர்மலிங்கம் என்ற தண்டனை விதிக்கப்பட்ட நபர் பேராதனையை வதிவிடமாகக் கொண்டவர்.
தலதா மாளிகையில் வெடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரம்பிய லொறியை கண்டிக்கு கொண்டு வந்ததாக தர்மலிங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதலாம் சந்தேக நபர் வெடிபொருட்கள் நிறைந்த லொறியை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்திருந்தார்.
கண்டி உயர்நீதிமன்றின் அப்போதைய நீதவான் நம்புவசம் என்பவரினால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முதலாம் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
வழக்கு விசாரணை செய்யப்படும் காலத்திலேயே இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்கள் உயிரிழந்துவிட்டனர்.
நான்காம் சந்தேக நபரான தர்மலிங்கத்திற்கு நீதவான் 667 வருடக கடூழிய சிறைத்தண்டனை, மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை விதித்திருந்தார்.
இந்த தண்டனைகளை ரத்து செய்யுமாறு தர்மலிங்கம் சட்டத்தரணியின் ஊடாக மேன்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment