Saturday, November 08, 2014
நாகப்பட்டினம்::ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கைக்கு போதை பொருள் கடத்தியதாக கூறிய
குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை கோர்ட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்தும்,
இலங்கையில் சிறையில் தற்போது அடைக்கப்பட்டு இருக்கும் 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம்
முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கடந்த 5-ந் தேதி முதல் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சில மீனவர்களும் நேற்று நாகைக்கு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத பந்தலுக்கு நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி நேற்று நேரில் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 82 விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை அரசு துன்புறுத்தி வருவதை நிரந்தரமாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை அறவழி போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் முனுசாமி உங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால் ஆகிய 5 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டமுடிவில் தொடர் வேலை நிறுத்தமும், உண்ணாவிரதமும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வருகிற 17-ந் தேதிக்குள் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுதலை செய்யவில்லை என்றால் 18-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment