Wednesday, November 5, 2014

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள கொரிய தூதுவர் - வட மாகாண ஆளுநர் சந்திப்பு!

g3
g4
g5
g6
Wednesday, November 05, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள கொரிய தூதுவர் வொன் சாம் சங்கிற்கும் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று இன்று (05) காலை இடம்பெற்றது.
    
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாணாசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் வருகை தந்த கொரிய தூதுவர் நேற்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், யாழ் போதனா வைத்தியசாலை, பொது நூலகம் ஆகியவற்றிற்கும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். 

No comments:

Post a Comment