Thursday, November 13, 2014

நரேந்திர மோடி ஒரு செயல்வீரர்: அமெரிக்க அதிபர் ஒபாமா!

Thursday, November 13, 2014
நய் பை தாவ்: மியான்மர் நாட்டில் ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனிதர் என்று நரேந்திர மோடியை ஒரு செயல்வீரர் என அமெரிக்க அதிபர் ஒபாமா மனதார பாராட்டினார்.மியான்மர் நாட்டின் தலைநகர் நய் பை தாவ்வில் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் மாநாடு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அதன்பிறகு 6 வாரங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று 2-வது முறையாக மோடி சந்தித்தார்.மியான்மர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியின்போது, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் ஒபாமாவிடம் கெம் சோச்சோ (எப்படி இருக்கிறீர்கள்) என்று கேட்டார். ஒபாமாவும் நன்றாக இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறினார். இந்த சந்திப்புக்கு பின் ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயல் மனிதர் என நரேந்திரமோடியை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment